மாம்சமான யாவருக்கும் கர்த்தர் நீர்
உம்மாலே கூடாத அதிசயம் ஒன்றுண்டோ - 2
கர்த்தாதி கர்த்தா ராஜாதிராஜா
சேனைகளின் கர்த்தர் நீர் - 2
யோர்தானின் தண்ணீரை பிரித்து குவித்து
நின்றிட செய்தது அதிசயமே
உமது ஜனத்தை வெட்டாந்தரை வழியாய்
கடந்திட செய்தது அதிசயமே - 2
சர்வ பூமிக்கும் ஆண்டவரே
உந்தனின் கரம் பெலமுள்ளதே - 2
சூரியன் மறையாமல் பகல் முழுவதும்
நடு வானில் நின்றது அதிசயமே
கர்த்தர் தாம் ஜனத்திற்காய் யுத்தம் செய்து
வெற்றியை தந்தது அதிசயமே - 2
சர்வ பூமிக்கும் ஆண்டவரே
உந்தனின் கரம் பெலமுள்ளதே - 2