துதிப் பாடல்கள்

குட்டி பாலகா கண் உறக்கம்

Kutti Paalagaa Kan Urakkam

குட்டி பாலகா கண் உறக்கம் கலைந்ததோ

உன்னை தட்டி தூக்கி நான் ஒட்டி அணைப்பேனே

குளிர்ந்திடும் இரவின் பனியிலே

கந்தையால் பொதிந்து காப்பேனே

கண்ணான கர்த்தனே கன்னி என்னை கண்டோனே

கண்களை சிமிட்டியே என்னை கவர்ந்தாயே

காண்பது விந்தையே காண கண்கள் போதாதே

கைகளில் ஏந்தி உன்னை கருத்தாய் காப்பேனே

ஏதேதோ கேள்விகள் மனதின் குழப்பங்கள்

எல்லாமே போனதே உன் முகம் பார்த்ததில்

எல்லைகள் தாண்டிய உள்ளான உணர்வினால்

என்னையே மறந்தேனே உன் குரல் கேட்டதில்

பார்வையின் பாஷைகள் நீ சொல்லி தந்தாயே

பால்முகம் பார்த்திட்டே நானும் வாழுவேன்

ஆனந்த கண்ணீரும் கண்களில் வழிந்து ஓடிட - உன்னை

அன்பினால் அன்னை நான் தாலாட்டி பாடும் ஆரிரோ

உன் முகஜாடையில் என்னை நான் கண்டிட

ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக வாழுவேன்

உன் மூச்சு காற்றின் சூட்டை நான் உணர்ந்திட

கண்முடி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டேன்

உலக சிருஷ்டிகரே என்னிடத்தில் அழுதிட்டாள்

உருகி போவேனே உன்னை பார்த்திடவே

நான் பாடும் தாலாட்டில் நீ தூங்கு பாலகா

எந்நாளும் என்நேசம் உன்னை தவிர வேறு யாருக்கு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு