குருசினில் கிறிஸ்துவின் இரத்தம்
சிந்தப்படும் கோரக் காட்சியைப் பார்
பாதகர்க்காகப் பாடுபடும் வேளைதனில் - 2
புது உடன்படிக்கையின் இரத்தம்
பாவ மன்னிப்புக்காய்ச் சிந்தினாரே - 2
பாவிகளின் நேசர் இயேசு தாமே - 2
கெத்செமனே இல் கிறிஸ்து இயேசு
இரத்தமதைப் பெருந்துளிகளாகச் - 2
சிந்தினாரே சீர்கெட்ட பாவிகட்காய் - 2
தீயர் தாடை ரோமம் பிடுங்கும் வேளை
தூயர் தம் தூய முகத்தினின்று - 2
தூய்மையான இரத்தமதைத் தாம் சிந்தினார் - 2
வாரினால் அடித்துப் படைச்சால்போல்
திரு சரீரம் கீறிக் கிழியும் வேளை - 2
கர்த்தர் தாமே திரு இரத்தம் தாம் சிந்தினார் - 2
முள்முடி சூட்டியே சிரசினில்
மூங்கில் தடியால் அடிக்கும் வேளை - 2
மீட்பர் இயேசு திரு இரத்தம் தாம் சிந்தினார் - 2
திருப்பரங் கால்கள் ஆணிகளால்
சிலுவையுடன் சேர்த்து அறையும் வேளை - 2
திரு இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தோடியது - 2
குருசினில் தொங்கும் கிறிஸ்துவின்
விலாவினில் ஈட்டியால் குத்தும் வேளை - 2
மீந்த இரத்தமதை முழுதுமாகத் தாம் சிந்தினார் - 2
ஜீவ இரத்தமதைப் பானம் செய்வோர்
நிலைத்து என்றென்றும் ஜீவனோடு- 2
சதாகாலமும் கிறிஸ்துவுடன் பிழைத்திருப்பார் - 2