குளிர்ந்த ஏலிம் காற்றே
அள்ள குறையாத ஊற்றே
வறண்ட நிலத்தில் ஆறாய் வந்தீரே இயேசுவே
என் வறட்சி எல்லாம் செழிப்பாய் மாற்றவே
மணலின்மேல் வீடுகட்டி பெருமழை வந்தநேரம்
செய்வது அறியாது நிலைகுலைந்து போனபோது
வந்தீரே புண்ணியரே வாழ்வளித்த வள்ளலே
இழந்ததை திரும்ப தந்தீரே இரட்டிப்பாக
இரட்சிப்பை நானும் கண்டேனே - உம்மிடத்தில்
வசனமாம் விதையை தூவி விளைச்சலின் பலனை நோக்கி
இராப்பகல் உறக்கமின்றி எதிர்பார்த்து கலக்கும்போது
வந்தீரே மகிமையாக தூயதேவ ஆவியே
கண்ணீரை களிப்பாய் மாற்றினீர் எந்தனின்
களஞ்சியங்கள் நிரம்ப செய்தீரே கோதுமையால்
மங்கிய திரியை போல நெரிந்த நாணல்போல
வலிமை இல்லாமல் பலனற்று சோர்ந்த போது
வந்தீரே ரபுனியே மீட்டெடுத்த முதல்வரே
அரணுக்கு திரும்ப செய்தீரே அன்பினால்
அரியணையில் அமர செய்தீரே- மீண்டும்