துதிப் பாடல்கள்

குடிப்பழக்கம் உங்குடியக்கெடுக்கும்

Kudippazhakkam Ungudiyakkedukkum

குடிப்பழக்கம் உங்குடியக்கெடுக்கும்

குடிப்பழக்கம் உடல்

நலத்தக் கெடுக்கும் - தம்பியே - 2

உன்னை அழிக்கும் குடி தேவையா

குடிச்சா நீ வாழ்வியா

கர்த்தரின் வார்த்தையைக் கேளைய்யா

அதுதான் உனக்கு ஜீவனைய்யா - 2

நித்திய ஜீவனைய்யா 2

1. ஆட்டோ ஓட்டிட்டு குடிச்சவரு - ஆட்டோவுக்கு

டியூவு கட்டாம போனாரு

டியூவு கட்டாம போனதால

ஆட்டோவ சேட்டு எடுத்துட்டு

போனாரு - அண்ணே - 2

இந்த குடியால பொழப்பும் கெட்டு ஓ... ஓ

வருமானமெல்லாம் போகுதண்ணே - 2

ஓனரா இருந்த நீங்க

இப்போ டிரைவரா ஆனது ஏங்க

சிந்திக்கனும் இத நீ சிந்திக்கனும்

கேட்டுக்கனும் சொல்லுறதக் கேட்டுக்கனும்

2. பொழுதோட எழுந்து குடிச்சவரு - அவரு

பொழுதோட போய் சேர்ந்தாரு

அவரையே நம்பியிருக்கும் அந்த

குடும்பத்தை யார் பார்ப்பாரு அண்ணே - 2

இந்த குடியால் குடும்பம் கெட்டு..ஓ...ஓ

நடுத்தெருவுல நிக்குதன்னே - 2

சொந்தமும் வெறுத்து தள்ளுது

இழந்த குடும்பமும் வாடி தவிக்குது

சிந்திக்கனும் இத நீ சிந்திக்கனும்

கேட்டுக்கனும் சொல்லுறத கேட்டுக்கனும்

3. ஒன்னு ரெண்டு சேத்து வச்சு - தெனமும்

நைன்டி வாங்கி அடிச்சவரு - 2

நைன்டி வாங்கி அடிச்சுப்புட்டு

நைட்டானா ஒதய

வாங்கிட்டு வந்தாரு அண்ணே - 2

இந்த குடியால ஒதியம்பட்டு...ஓ...ஓ

தெனம் போகுறீங்க திட்டுப்பட்டு 2

தேவைய்யா இந்த குடி தேவையா

வாழய்யா திருந்தி வாழய்யா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு