துதிப் பாடல்கள்

கொஞ்சம் காலம் தான்

Konjam Kaalam Thaan

கொஞ்சம் காலம் தான்

நெஞ்சம் ஏங்குதே

நேசர் இயேசுவில் ஆசையாகுமே

கண்ணீரும் மாறும் கவலை தீரும்

நெஞ்சங்கள் சேரும் நாளதுவே

தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள்

ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே ஆ . . . ஆ .

செல்வோம் வானில் செல்வோம்

மகிழ்வோம் அவரில் மகிழ்வோம்

கண்ணீரும் மாறும் கவலை தீரும்

நெஞ்சங்கள் சேரும் நாளதுவே

கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்

பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே

சொன்னார் இயேசு சொன்னார்

இந்நாள் நேசர் வரும் நாள்

கண்ணீரும் மாறும் கவலை தீரும்

நெஞ்சங்கள் சேரும் நாளதுவே

நீதி அழிவதால் அன்பு தனிந்துமே

நாசம் பெருகியே நெஞ்சம் சோருமே

வருவார் இயேசு வருவார்

ஆள்வார் என்றும் ஆள்வார்

கண்ணீரும் மாறும் கவலை தீரும்

நெஞ்சங்கள் சேரும் நாளதுவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு