துதிப் பாடல்கள்

கிரியை செய்தருள்வீர்

Kiriyai Seydharulveer

கிரியை செய்தருள்வீர்

எங்கள் இயேசுவே

கிரியைகளைச் செய்தருள்வீர்

எங்கள் தேவனே

கிரியை செய்தருள்வீர்

எங்கள் இயேசு தேவனே

உடனே உம் கிரியைகளை

செய்தருள்வீர் தேவனே

உலகின் ஒரே மீட்பரான

இயேசு தேவனே உடனே

உலகோரை மீட்டு

ரட்சித்தருள்வீர்

உலகின் ஒரே ரட்சகரான

கிறிஸ்து இயேசுவே

ஜனங்களின் பாவங்களை

நீக்கி ரட்சித்தருள்வீர்

எல்லா நோய்களையும்

குணமாக்கும் அற்புதரே

உம் அற்புதக் கிரியைகளை

உடனே செய்தருள்வீர்

எல்லா நாமத்திற்கும் மா

மேலான நாமத்தை

உடையவரான இயேசுவே உம்

நாமம் விளங்கச் செய்வீர்

எல்லா நாவுகளும்

இயேசுவே உம்மையே

ஒன்றான மெய் தேவன் என்று

அறிக்கைபண்ணச் செய்வீர்

இயேசுவே உம் நாமத்தில்

வானோர் பூதலத்தோர்

பூமியின் கீழானோரின்

முழங்கால் முடங்கச் செய்வீர்

கர்த்தாதி கர்த்தாவே

ராஜாதி ராஜாவே உம்

ஜெய கெம்பீரக் கிரியைகள்

எங்கும் செய்தருள்வீர்

அதரிசனமான எங்கள்

அன்பின் தேவனே உம்

பெரிய அற்புதக் கிரியைகள்

அடியார் காணச் செய்வீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு