கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் - 2
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும்
உன்னதர் படையில் பணி புரிவோம்
இறைமகன் இயேசு வாழ்க ! வாழ்க !
அதிசயமானவர் வாழ்க வாழ்க !
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க !
மரித்துயிர்த்தெழுந்தாரே 2 .
சத்திய கச்சையை அறையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தைப் பிடிப்போம் -
இரட்சண்ய தலைச்சீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம்
வாழ்க ! வாழ்க வாழ்க ( 7 )
வாழ்க நீர் வாழ்க உம் நாமம் வாழ்க
உம் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க