கிறிஸ்துவை தெய்வமாக தெரிந்து கொண்டேன்
அவரை விட்டு என்று விலகமாட்டேன்
அவரையே முழுமையாக பற்றிக்கொண்டேன்
அவரை விட்டு விலகி போகமாட்டேன் -2
உயர்விலும் தாழ்விலும்
உம் அன்பைவிட்டு என்று பிரிக்கமாட்டதே - 2
1. உம்மை விட்டு விலக செய்யும் காரியங்கள்
யோசேப்பை போல உதறி தள்ளிவிட்டேன்
2. உம்மை துதிக்க தடை வந்தலுமே
தானியேல் போல் 3 வேலையும் ஜெபித்திடுவேன்
3. மோசே போல பல காரணம் சொன்னாலும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பினீர்
4. யோனா போலா ஓடி ஓடி ஒளிந்தாலூம்
உம் வசனம் சொல்ல என்னை அனுப்பினீர்