கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம் -நம்ம
கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம் - 2
டிசம்பர் 25 எங்கும் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் வந்தாலே ரொம்ப சந்தோஷம். -. 2
மேளதாளம் முழங்கிடவே
ஆட்டம்பாட்டும் பெருகிடவே ஹாப்பி கிறிஸ்துமஸ் (Happy Christmas) - 2
1. பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் வாசலிலே - 2
ஈசாயின் அடிமரம்தான் கிளையாக செழித்தெழும்பி
இராஜாதி இராஜாவானார் – எங்கள்
இராஜாதி இராஜாவானார்
2. சாஸ்திரிகள் வந்தார்கள் சத்தியத்தையறிந்தார்கள் - 2
பொன்னும் வெள்ளி தங்கம் வைத்து
ஆராதனை செய்தார்கள் – அவரை
ஆராதனை செய்தார்கள்
3. சமாதானம் சந்தோஷம் நிறைவாய் தந்தாரே - 2
ஆடல் பாடல் முழக்கத்தோடு சபைகளெல்லாம் சேர்ந்து கொண்டு
உலகமெங்கும் கொண்டாடுவோம் - நாங்க
உலகமெங்கும் கொண்டாடுவோம்