துதிப் பாடல்கள்

கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால்

Kiristhavarae Naam Ondru Pattaal

கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால்

வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும்

ஒரு மனமாய் நாம் உழைக்கும் போது

நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும்

எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை

ஒன்றுமே தெரியாதவர் யாருமில்லை

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்

கடற்கரை மணல்போல பெருகிடுவோம்

எங்க சபை உங்க சபை சண்டை வேண்டாம்

பெரிய சபை சின்ன சபை நினைப்பு வேண்டாம்

ஆதிசபை சத்தியத்தை பெருமை வேண்டாம்

ஒரு தாய் மக்களாய் இணைந்து வாழ்வோம்

Father என்றும் Pastor என்றும்

சண்டை வேண்டாம்

அங்கி என்றும் லுங்கி என்றும்

தர்க்கம் வேண்டாம்

மீசையை வளர்ப்பதும் தாடியை வளர்ப்பதும்

அவரவர் விருப்பமல்லோ

அன்பு தான் முக்கியம் என்று உணர்ந்திடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு