1. கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும் -2
தேடுங்கள் கண்டடைவீர்
என்றுரைத்த எம் இயேசுவே -2
2. மானிடரின் ஜெபமதை
மன்னவா நீர் கேட்பதால் -2
மாம்சமான யாவரும்
உம்மிடமே வருவார்கள் -2
3. பாவங்களை மன்னித்து
இரட்சிக்கும் இரட்சகரே -2
வியாதிகளை சொஸ்தமாக்கி
பிசாசுகளைத் துரத்துபவரே -2
4. நோய்களைக் குணமாக்கி
பிசாசுகளைத் துரத்திட -2
உம் சீஷராம் ஊழியர்க்கும்
அதிகாரம் அளித்தீரே -2
5. எப்பொழுதும் ஜெபம்பண்ணி
விழித்திருங்கள் என்றீரே -2
விழித்திருப்போர் விசுவாசத்தில்
பிழைத்திருக்கச் செய்கிறீரே -2
6. எல்லாவற்றிற்கும் முடிவு
சமீபம் ஆகையால் -2
ஜாக்கிரதையாய் ஜெபம்பண்ணி
புத்தியுடன் விழித்திருங்கள் -2
7. விண்ணப்பம் வேண்டுதல்
மன்றாட்டு ஜெபத்துடன் -2
விழித்திருந்து காத்திருப்போர்
விண்ணுலகம் சேர்வரே -2