துதிப் பாடல்கள்

கருவறை முதல் கல்லறை வரைக்கும்

Karuvarai Mudhal Kallarai Varaikkum

கருவறை முதல் கல்லறை வரைக்கும்

சில்லரைத் தேவை உலகில் சில்லரை தேவை - 2

நல்லார்க்கும் பொல்லாருக்கும்

நாட்டில் வாழும் எல்லாருக்கும் - 2

இல்லார்க்கும் இருப்பவர்க்கும்

ரோட்டில் பிச்சை எடுப்பவர்க்கும் - 2

கட்டிய மனைவியானாலும் பெற்றெடுத்த பிள்ளையானலும் நீ -

உன்னோடு ஒட்டிப் பிறந்தாலும் - நல்ல

நண்பனாய் கட்டிப் புரண்டாலும் - 2 , அதற்கும்

இயேசுவைக் காட்டிக் கொடுத்ததும் - இந்த

சில்லரையின் தாகத்தினாலே - யூதாஸ் - 2

கேயாசி குஷ்டரோகியானதும் - இந்த

சில்லரையின் மோகத்தினாலே - நல்ல - 2 அதனால் -

பணமோ எல்லாவற்றுக்கும் உதவும்

என்றுதான் வேதம் சொல்லுது - ஐயா - 2

ஆனாலும் பண ஆசைதான் எல்லா தீமைக்கும் வேறானது

பணம் மட்டுமே இருப்பது தான் வாழ்க்கை இல்லீங்க

அந்த வாழ்க்கையிலே இயேசுயிருந்தா தொல்லை இல்லீங்க

எப்பவும் தொல்லை இல்லீங்க - அதனால்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு