கர்த்தரோடு நீ இருந்தால் (2 நாள் 9:2)
உன்னோடு அவர் இருப்பார்
கர்த்தரை நீ தேடினால்
உனக்கு அவர் தென்படுவார்
அவரை நீ விட்டு விட்டால்
அவர் உன்னை விட்டுடுவார்
அவர் உன்னை விட்டுடுவார்
1. கர்த்தரை நீ தேடினால் (2 நாள் 30:9)
உன் சிறையிருப்பை மாற்றுவார்
கர்த்தரை நீ தேடினால்
அவர் உனக்கு இறங்கிடுவார் - 2
அல்லேலூயா ஆமென் - 2
2. பரிசுத்தம் பண்ணிக் கொண்டால்
உன் மீறுதல்கள் மன்னித்திடுவார்
கர்த்தரை நீ துதித்தாலே
மகிழ்ச்சி தானாய் வருமே - 2 (2 நாள் 30 19- 25)
அல்லேலூயா ஆமென் - 2