கர்த்தரின் கரத்தில் அலங்கார கிரீடமும்
தேவனின் கரத்தில் ராஜ முடி நீ
இனி நீ கைவிடப்படுவதில்லை
இனி உன் தேசம் அழிவதில்லை (ஏசாயா 62:4)
உன்மேல் இயேசு பிரியமாயிருக்கிறார்
உன் தேசம் என்றும் வாழ்க்கைப்படுமே
1. நீ எப்சிபா என்றும்,
தேசம் பியூலா என்றும்
உன்மேல் இயேசு பிரியமாயிருக்கிறார்
உன் தேசம் என்றும் வாழ்க்கைப்படுமே
2. மணவாளன் இயேசு
மணவாட்டி உன்னில்
உன்மேல் இயேசு மகிழ்ச்சியாயிருப்பார்.
உன் மன வாழ்வு என்றும் ஆசீர்வதிக்கப்படும்
3. என் பிரியமே என்று
என் ரூபவதியே என்று
உன்மேல் இயேசு பிரியமாயிருக்கிறார்
உன் தேசம் என்றும் வாழ்க்கைப்படுமே