துதிப் பாடல்கள்

கர்த்தர் என்னை கண்டாரைய்யா

Karthar Ennai Kandaaraiyyaa

கர்த்தர் என்னை கண்டாரைய்யா

கண்ணீரெல்லாம் துடைத்தாரைய்யா-2

கரம் பிடித்து நடத்தினாரே

கவலை எல்லாம் மாற்றினாரே-2

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

1. இராவெல்லாம் கஷ்டப்பட்டு ஒன்றும் இல்ல

இனிமே இந்த வேலை தேவை இல்ல-2

கஷ்டப்பட்ட என்னையுமே கண்டாரைய்யா

அவர் இஷ்டம் போல மீனத் தந்தாரைய்யா-2

2. எரிக்கோவில் வாழ்ந்த குள்ளன் நானே

ஏழைகளை ஏமாற்றி சம்பாதித்தேனே-2

எத்தனான என்னைத் தேடி இயேசு வந்தாரே

என் வீட்டுக்கே இரட்சிப்பை தந்து விட்டாரே-2

3. குளத்தில இறக்கி விட ஆளேயில்ல

குணமாக கொஞ்சம் கூட வழியே இல்ல-2

பாடு பட்ட என்னைத் தேடி இயேசு வந்தாரே

படுக்கய எடுத்துக் கொண்டு நடன்னு சொன்னாரே-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு