கர்த்தாவே காலையிலே
என் சத்தம் கேட்டருளும்-2
இருகரம் உயர்த்தியே
என்னை நான் தாழ்த்தியே
இதயத்தை ஊற்றவே
உம்மிடம் வந்துள்ளேன்
உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா
உமையன்றி யாரிடம் நிற்பேன் நானய்யா-2
என் கண்கள் எப்பொழுதும்
உம்மை எதிர்பார்க்கின்றன
எந்தன் அலைச்சல் யாவும்
நீர் அறிந்திருக்கின்றீர்-2
உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா
உம்மையன்றி யாரிடம்
நிற்பேன் நானய்யா-2
எனது ஏங்கல் எல்லாம்
உந்தன் முன்பாய் இருக்கின்றன
எந்தன் தவிப்பெல்லாம்
மறைவாய் போகவில்லை
உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா
உம்மையன்றி யாரிடம்
நிற்பேன் நான் ஐயா-2
இரவும் பகலும் நான் உம்மை
நோக்கிக் கூப்பிடுவேன்
ஆலயத்தின் வாசலிலே
உமக்காய் காத்திருப்பேன
உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா
உம்மையன்றி யாரிடம்
நிற்பேன் நான் ஐயா-2