கர்த்தாவே என் ஜெபத்தை கேட்டருளும்
என் விண்ணப்பத்திற்கும் செவிகொடும் - 2
உமது உண்மையிலும் உமது நீதியிலும்
எனக்கு பதில் அருளும் (2) (2)
1. வறண்ட நிலத்தை போல என் ஆத்துமா
தாகமாய் இருக்கின்றது (2)
உமது முகத்தை மறையாமல்
எனக்கு பதில் அருளும் (2)
2. அதிகாலையில் உம் கிருபையை
என் ஆத்துமா கேட்கப்பண்ணும் (2) உணரபண்ணும்
நடக்கும் வழியை காண்பித்து
எனக்கு பதில் அருளும் (2)
3. உமக்கு பிரியமானதை நான்
செய்ய போதித்தருளும் நான்
செய்ய போதித்தருளும் (2)
செம்மையான பாதையில் - தூய
ஆவியால் வழிநடத்தும்