கரத்தால் தொடும்
இயேசுவே - கரத்தால் தொடும்
தேவனே கரத்தால் தொடும்
1. ஆணிகள் பாய்ந்த உம்
அன்பின் கரங்களால் -2
ஆசீர்வதித்தருளும் - இயேசுவே
ஆசீர்வதித்தருளும்
2. சிறு பிள்ளைகள் மேல் உம்
கரங்களை வைத்து -2
அணைத்தாசீர்வதித்தீர் -இயேசுவே
அணைத்தாசீர்வதித்தீர்
3. பரிசுத்த கரங்களை
உயர்த்தி உம் சீஷர்களை -2
ஆசீர்வதித்தீரே - இயேசுவே
ஆசீர்வதித்தீரே
4. வல்லமைக் கரங்களால்
எண்ணிறந்தோரைத் தொட்டு -2
சொஸ்தமாக்கினீரே - இயேசுவே
சொஸ்தமாக்கினீரே
5. அற்புதக் கரங்களால்
மரித்தோரைத் தொட்டு -2
உயிர் பிழைக்கச் செய்தீர் -இயேசுவே
உயிர் பிழைக்கச் செய்தீர்
6. பராக்கிரமம் நிறைந்த உம்
கரங்களிலிருந்து -2
கிரணங்கள் வீசுகிறது - தேவ ஒளிக்
கிரணங்கள் வீசுகிறது
7. அதிசயக் கரங்களால் அப்
பத்தை ஆசீர்வதித்து -2
அநேகரைப் போஷித்தீரே - இயேசுவே
அநேகரைப் போஷித்தீரே
8. சிறியவராம் உம்
ஊழியக்காரர்கள் மேல் -2
கரங்களை வைப்பேன் என்றீர் - இயேசுவே
கரங்களை வைப்பேன் என்றீர்
9. சிறியவராம் எம்மேல் உம்
திருக்கரங்களை - 2
எப்போதும் வைத்தருளும் - இயேசுவே
எப்போதும் வைத்தருளும்