துதிப் பாடல்கள்

கரங்களை தட்டுவோம்

Karangalai Thattuvom

கரங்களை தட்டுவோம்

கர்த்தரையே துதிப்போம்

காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

இம்மட்டும் காத்தவர்

இனியும் காப்பவர்

கடைசி வரைக்கும் கைவிடமாட்டார்

சோர்ந்திடாமல் நாம் பாடிடுவோம்

காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

ஆபத்து காலத்தில் அடைக்கலமானவர்

நோயுற்ற நேரத்தில் வைத்தியராவார்

கவலை வேண்டாம் கரம் தட்டுவோம்

காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

வானத்து பறவையை

வயல்வெளி மலர்களை

போஷித்து உடுத்தும்

உன்னத தேவன்

உறங்கிடாமல் உற்சாகம் கொள்வோம்

காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு