கண்ணோக்கி பாரும் இயேசைய்யா
உம்மை விட்டா நாதி ஏதையா
இயேசைய்யா கண்ணோக்கி பாரும் இயேசைய்யா
இருளிலே வாழ்வதற்கு இரண்டு கண் எதற்கு
இடறிடும் பாதை செல்லும் இரண்டு கால் எதற்கு
இதயத்தில் நீர் இருக்க அவயத்தில் குறைவென்னவோ
நீங்க மனசு வச்சாலே மேன்மை அடைவேனே
குருவியாய் இருந்தாலும் கழுகாய் பறப்பேனே
உங்க தயவாளே - இயேசையா
உயரப்பறந்தாலும் உலகெங்கும் போனாலும்
ஊர்பேசும் அளவுக்கு ஒய்யாரமா வாழ்ந்தாலும்
உடல் விட்டு உயிர் போகுமே
அதை உணர்ந்திடும் காலம் வருமே
உருவங்கள் மாறலாம் உன் உள்ளமது மாறாது
உன்னையே மாற்றிடவே உனக்காக வந்தாரு
அவர்தானே நம்மாளு - இயேசைய்யா