துதிப் பாடல்கள்

கண்ணா சுத்த கண்ணா

Kannaa Sutha Kannaa

கண்ணா சுத்த கண்ணா

தீமையை பார்க்காத சுத்த கண்ணா

தீமை செய்த மனிதனுக்கு

நன்மை செய்த கண்ணா

பாவியை அணைக்கின்ற

கருணைக் கண்ணா

கண்ணா இயேசு இராஜா

என்னிடம் பாவம் உண்டு என்று

யார் என்னை குறைகூற முடியும் என்றீர்

குறையேதுமில்லாத அவதாரமே

நிஷ்களங்க புருஷப் பிரஜாபதியே

குற்றமே இல்லாத நிர்மல நாதா கண்ணா

பாவமின்றி நீர் வாழ்ந்தது போல

மனிதர்களை பாவமின்றி வாழச் சொன்னீர்

சொல்லாலும் செயலாலும் சிந்தனையினாலும்

முன்மாதிரியாய் வாழ்ந்த வழிகாட்டியே

மனிதன் எப்படி வாழவேண்டும்

என்று கற்றுத் தந்த அன்பு அண்ணா

ஜாதி வெறியை ஒழிக்க வந்த

சமத்துவ கண்ணா

ஒற்றுமை உருவாக்க வந்த

சமாதானக் கண்ணா

நாக தோஷம், சனி தோஷம்,

செவ்வாய் தோஷம் என்று

பயந்து பயந்து வாழ்வோருக்கு

விடுதலை தரும் கண்ணா,

தோஷம் நீங்கி நாங்கள் வாழ

சிலுவையிலே உயிரைத் தந்த கண்ணா.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு