துதிப் பாடல்கள்

கனிகொடு மகனே மகளே

Kanigodu Maganae Magalae

கனிகொடு மகனே மகளே

கர்த்தர் பெரிய காரியம் செய்வார்

கனிகொடு மகனே மகளே

கர்த்தர் புதிய காரியம் செய்வார்

மாம்சத்தின் கிரிகையை விட்டு ஓடிடு

ஆவியின் கனிகளை நாளும் தந்திடு – 2

1.ஆவியின் கனியோ அன்பு சந்தோசம் சமாதானம்

நீடியபொறுமை சாந்தம் தயவு நற்குணம் விசுவாசம் - 2

இச்சையடக்கம் நாவின் அடக்கம்~

இப்படி உன் வாழ்வில் கனியைக் கொடு

இச்சையடக்கம் நாவின் அடக்கம்~

இப்படியான கனியைக் கொடு

2.கொடியானது செடியில் நிலைக்காமல் பிரிந்திருந்தால்

தானாய் கனிகொடுக்க இயலாது தான் என்றார் - 2

கிறிஸ்துவில் நீயும் நிலைத்திருந்தால்

நல்ல கனிகளைக் கொடுத்திடுவாய்

கிறிஸ்துவில் நீயும் நிலைத்திருந்தால்

மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவாய்

3.நீ நல்ல நிலத்தில் விதைத்து வளர்ந்த மரமென்றால்

நல்ல கனிகளைக் கொடுத்திடுவாய் - 2

இயேசு ஓர் நாள் வந்திடுவார்

கனிகளை எதிர்பார்த்து தேடிடுவார்

இயேசு ஓர் நாள் வந்திடுவார்

கனிகளில்லாதிருந்தால் கடிந்து கொள்வார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு