கண்டதுண்டோ இயேசுபோல் - எங்குமே
கண்டதுண்டோ இயேசுபோல் - எங்குமே
கண்டதுண்டோ இயேசுபோல்
கண்டதுண்டோ உண்டோ
உண்டோ எங்குமே
1. பரலோகை விட்டு பாரினில் வந்தோர்
பரிசுத்தராகவே - 2
பாரினில் இருந்தோர்
2. பாவிகட்காக பாடுகள் பட்டோர்
பரகதி அடைந்திட -2
ஜீவனை ஈந்தோர்
3. அலகையைக் கொன்றோர்,
மரணத்தை வென்றோர் -2
மூன்றாம் தினமதில்
உயிர்த்தெழுந்தோர்
4. நாற்பது நாள் உலகினில் சஞ்சரித்தோர் -2
சீஷர்கள் கண்காண
விண்ணுலகம் சென்றோர்
5. பரிசுத்தமாய் வாழ்ந்திட
பரிசுத்த ஆவியை அளித்தோர் - 2
பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருப்போர்
6.பரலோகை விட்டு வீண்டும்
வானினில் வருவோர் -2
பரிசுத்தவான்களை
பரலோகம் சேர்ப்போர்