கல்வாரியிலே என் இயேசு தேவா
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே - 2
வேர்வையின் குருதி துளியாக
வேதனை பெருகிட சென்றீரே - 2
பாத்திரம் நீங்கிட சித்தம் ஐயா
படைக்கிறேன் என்றே ஜெபித்தீரே - 1
கொல்கொதா மலையின் மேட்டினிலே
கொடிய பாடுகள் சுமந்தீரே - 2
கல்லும் முள்ளும் வருத்தவே
கர்த்தர் நடந்து சென்றீரே - 1
தூங்கிடா இரவு முழுவதுமே
துஷ்டர்கள் முன்னால் நின்றீரே - 2
துப்பிட சாட்டையால் அடிப்பட
குற்றமும் சுமத்திடப்பட்டிரே - 1