கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்
உனக்கும் புரியலையோ
கோழிதன் குஞ்சிகளை
தன் செட்டையில் சேர்ப்பதுபோல் - 2
கொள்கொதா மலையில்
கோரகாட்சியை கொண்டார் உனக்காக
கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உன் மனம் உருகளையோ
1. எத்தனை அன்பு வைத்தே
ஆளுகை செய்யவந்தார் - 2
அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீ
அழிவுப்பாதை சென்றாயே - 2
இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா - 2
இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே - 2
2. வாரினால் அடிப்பட்டே
வன்சிலுவை சுமந்தே - 2
வாஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்று
நெஞ்சமே நொந்திடுதே - 2
வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை - 2
கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதரினாரே - 2