துதிப் பாடல்கள்

களிமண்ணையும் ஒரு

Kalimannaiyum Oru

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

உமக்கென்று பாட செய்தீர்

துதிகன மகிமை உமக்குத் தான் துதியும்

புகழ்ச்சியும் உமக்குத் தான்

1. ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்

உன்னத அன்பால் என்னை நேசித்தர் -

ராஜாக்களாக மாற்றி விட்டீர்

ஆசாரியனாக மாற்றி விட்டீர் - துதி

2. உளையான சேற்றில் இருந்த என்னை

மாறாத நேசத்தால் எடுத்தீரய்யா

அபிஷேகத்தால் என்னை நிறைத்து வீட்டீர்

அபிஷேக பாத்ரமாய் மாற்றி விட்டீர்

3. ஆபத்து காலத்தில் அடைக்கலமே

இக்கட்டு நேரத்தில் ஆறுதலே

இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

கிருபையும் அன்பும் நிறைந்தவரே

4. அதிசயமாய் என்னை நடத்துகிறீர்

அற்புதமாய் என்னை நடத்துகிறீர்

அதிசய குயவனே ஸ்தோத்திரமய்யா

அற்புத நாயகனே ஸ்தோத்திரமய்யா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு