துதிப் பாடல்கள்

காட்டு மரங்களின்

Kaattu Marangalin

காட்டு மரங்களின் நடுவில் ஒரு கிச்சிலி மரம் போல

பரிசுத்தர்கள் மத்தியிலே இயேசு

சிறந்து விளங்குகிறார் - 2

போற்றுவேன் எந்தன் நேசரை

ஜீவ காலமெல்லாம் இவ்வனாந்தரத்தில்

நன்றியோடு நான் பாடிடுவேன் - 2

சாரோனின் ரோஜா அவரே

பள்ளத்தாக்கின் லீலி அவரே - 2

பரிசுத்தரில் சுத்தர் அவர்

பதினாயிரங்களில் சிறந்தோர்

என் பாதைக்கு தீபமும் நீர்

என் வாழ்வுக்கு ஜீவனும் நீர்

என் சேவைக்கு வல்லமை நீர்

என் ஆவிக்கு ஆறுதல் நீர்

உம் திருமுகம் பார்த்திருப்பேன்

உம் திருமறை படித்திருப்பேன்

உம் திருப்பணி செய்திருப்பேன்

உம் திருவடி அமர்ந்திருப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு