துதிப் பாடல்கள்

காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்

Kaathiruppom Parisuthaavikkaay

காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்ப்

பரனின் சமுகமதில்

கர்த்தரின் இயேசுவின் வாக்குத்தத்தங்களை

கருத்துடன் விசுவாசித்து - 2

தேவன் நம்மேல் வைத்த அன்பைக்

கிறிஸ்துவால் விளங்கச் செய்தார் - 2

தேவன்பை அவர் பரிசுத்த ஆவியால்

உள்ளத்தில் ஊற்றிடுவார் - 2

பரிசுத்த ஆவி பெற்றிட நாமே

கிருபையின் காலம் இதே - 2

பரிசுத்தமாகுதல் பெற்றிட

நமக்கு பரனின் அருளிதுவாம் - 2

ஆவியின் கனிகள் அடைந்திட நாமே

ஆவியில் நிறைந்திடுவோம் - 2

ஆக்கினைத்தீர்ப்பினின் றகன்றிடவே

நாம் ஆவியின்படி நடப்போம் - 2

தேவ ஆவியால் நடத்திடப்படுவோர்

தேவனின் பிள்ளைகள் - 2

தேவனின் ஆவியானவர் சபையை

சத்தியத்தில் நடத்திடுவா - 2

ஒருமனப்பட்டு ஊக்கமுடனே

விண்ணப்பம் செய்திடுவோம் - 2

ஒருமனப்படுவோம் ஒழுங்குடன் நடப்போம்

உத்தமர் வருகைக்காக - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு