கானாவூரின் கல்யாண வீட்டில்
அழைக்கப்பட்ட இயேசுவே
எங்கள் வீட்டின் கல்யாண வீட்டில்
அழைக்கிறோம் உம்மை வாரும்
வாருமே இயேசுவே வாருமே
எங்கள் குறையெல்லாம்
நிறைவாக்க வாருமே
பந்தல் பத்திரிக்கை
எல்லாமே செய்திட
வீட்டுக்கு அழைக்கப்பட்டோர்
தடையில்லாமல் சேர்ந்திட – 2
உணவு திராட்சை ரசம்
குறைந்து போகாமல்
பந்தி விசாரிப்பு
பரிபூர்ணமாகிட – 2
சமையல் உணவுவகை
ருசியாக மாறிட
வருகின்ற ஜனங்கள் எல்லாம்
திருப்பதியாக சாப்பிட – 2