காலங்களை கையில் வைத்தவரே
காலையும் மாலையும் கொடுத்தவரே
காத்து இரட்சிக்கும் நேசரே கருணையிலே வல்லவரே
1. உலகை படைத்த உத்தமரே
உண்மை உள்ள நல்ல தேவனே
பகலையும் இரவையும் படைத்தவரே
பக்தனுக்கு உணவை அளித்தவரே
ஆராதிப்போம் இந்த வேளையிலே
2. வானத்திலே ஆசீர்வாதம் வைத்து
வருஷம் மழை அளிக்கிறீர்
செழிப்பான தண்ணீரை தந்து
சிறப்பான அறுவடை அளிக்கிறீர் (காலங்களை)
3. தேசத்தை கிருபையால் நிரப்பி
இரட்சிக்கிறீர் இரக்கமாய் மக்களை
பெருமையாய் நியாயம் தீர்த்து
உண்மையாய் பரலோகத்தில் சேர்க்கிறீர் (காலங்களை)