துதிப் பாடல்கள்

காலையில் எழுந்து நீ கர்த்தரை

Kaalaiyil Ezhundhu Nee Kartharai

காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராதித்திடு

துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு

போற்றிடு பாடிடு தொழுதிடு

இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்

இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்

துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு

ஆராதித்திடு இயேசுவை

துக்கத்தின் ஆவி கலங்கி போகட்டும்

துதியின் ஆவி உனக்குள் வரட்டும்

துதித்திடு போற்றிடு வாழ்த்திடு

வணங்கிடு ஆர்ப்பரித்திடு இயேசுவை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு