ஜெயம் ஜெயமே இயேசு நாமம் ஜெயமே
ஜெயம் ஜெயமே இயேசு இரத்தம் ஜெயமே
சாத்தானுக்கு சாவு மணி அடிக்கப் போகிறோம்
சத்துருவின் கோட்டைகளை உடைக்கப் போகிறோம்
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நாமத்தில்
சீறிவரும் சாத்தானை மிதித்துப் போடுவோம் - ஜெயம் ஜெயமே
1. துதியினால் எரிகோ கோட்டை தகர்ந்தது போல
எதிரே நிற்கும் தடைகளை தகர்த்து போடுவோம் - 2
யேகோவா நிசி எங்கள் முன்னே செல்வதால்
எப்பேர்பட்ட யுத்தத்திலும்
ஜெயிக்கப்போகிறோம் - 2 – ஜெயம் ஜெயமே
2. ஒரு கூழாங்கல் கோலியாத்தை கொன்றதுபோல
சாத்தானை நெத்தியடி அடிக்கப் போகிறோம்
யேகோவா ஷம்மா எங்கள் கூட இருப்பதால்
எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் - ஜெயம் ஜெயமே
3. சாத்தானை அக்கினிக்கு இரையாக்கும்வரை
எங்கள் ஆவி ஆத்மா சரீரம்
என்றும் ஓய்வதில்லையே
யேகோவா ரஃபா எங்கள் கூட இருப்பதால்
எப்பேர்பட்ட வியாதியும் நெருங்குவதில்லை – ஜெயமே ஜெயமே