துதிப் பாடல்கள்

ஜீவனைப் பெற ஜீவாதிபதியாம்

Jeevanaip Pera Jeevaadhibadhiyaam

ஜீவனைப் பெற ஜீவாதிபதியாம் இயேசு அழைக்கிறார் எழுந்துவா பாவி- 2

1. பாவத்தின் சம்பளம் மரணம் நீ அறிவாய் -2

பாவத்தைச் செய்தால் நீ பாழ்நரகடைவாய்

பாவ வழியில் நீ செல்லாதே வா என்று -2

அன்பாய் அழைக்கிறார் திரும்பி வா நீ இன்று

2. பாவி உனக்காக பரலோகம் விட்டவர் -2

பாரினில் வந்துனக்கா யவதரித்தவர்

பாவ மாம்சத்தின் சாயலணிந்தவர் -2

பார்த்துன்னை அழைக்கிறார் வந்திடுவாய் இன்று

3. பாவி உனக்காக பாடுகள் பட்டவர் -2

பாரில் உனக்காக இரத்தம் சிந்தினவர்

பாவத்தில் மரித்த உனக்காய் ஜீவன் கொடுத்தவர் - 2

வருந்தியழைக்கிறார் வந்திடுவாய் இன்று

4. பாரக்குருசினில் வேதனையுற்றவர் -2

பாவ மன்னிப்புக்காய் வேண்டுதல் செய்தவர்

பாவிகட்காய் மீட்பை ஆயத்தமாக்கினவர் -2

உள்ளம் உருகியே அழைக்கிறார் வா இன்று

5. நியாயாதிபதியாக இயேசு வந்திடுவார் - 2

நியாயம் விசாரிப்பார் பாவிகளை அன்று

நியாயம் தீர்த்து நித்திய அழிவாகும் தண்டனையை -2

நீதியாய்ச் செலுத்துவார் பாவிகளுக் கன்று

6.விசுவாசித்தால் நீயும் இரட்சிப்பைப் பெறுவாய் -2

விசுவாசித்து உன்னை ஒப்புக் கொடுப்பாய்

விசுவாசித்தால் அவர் மகிமையைக் காண்பாய் -2 என்றென்றும் அவருடன் சுகித்திருந்திடுவாய்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு