துதிப் பாடல்கள்

ஜீவ தண்ணீரே ஆவியானவரே

Jeeva Thanneerae Aaviyaanavarae

ஜீவ தண்ணீரே ஆவியானவரே

ஊற்றுத் தண்ணீரே வல்ல ஆவியே

என்னில் பொங்கி பொங்கி

பொங்கி பொங்கி வழியுதே

பரிசுத்த ஆவி வந்ததால்

பாலை வனம் சோலைவனமாய் மாறும்

கடுவெளி யும் புஷ்பம் போல செழிக்கும்

மார்க்கம் தப்பி அலைந்த மக்கள்

இயேசுவை காண்பாரே

இரட்சிப்பை அடைவாரே

வல்லமையும் திராணியையும்

உடையவராய் செயல்படுவார்

வெள்ளம்போல் சாத்தான் வருகையில்

யேகோவா நிசியாவார்

ஜெயக்கொடி ஏற்றிடுவார்

புதிய ஜீவன் புதிய ஆவி

நம் மேலே பெலமாய் இறங்கும்

குருடர் பார்க்க செவிடர் கேட்க

முடவர் நடத்திடுவார்

மரித்தோர் எழும்பிடுவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு