ஜீவ ரட்சணை உண்டாக்கவே
உன்னை தேவன் தேவன் முன்குறித்தார்
முன்குறித்ததை நிறைவேற்றவே
இந்த பாடுகள் அனுமதித்தார் - 2
நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் ஒவ்வொரு நிகழ்வும் உன் உயர்வுக்குத்தான் - 2
- ஜீவ ரட்சணை
முடிந்து போனது வாழ்க்கையென்று
உறவுகள் உன்னை மறந்தாலும்
இனியும் எழும்ப வழியே இல்லையென்று
எதிரிகள் உன்னை சூழ்ந்தாலும் - 2
உன்மேல் இயேசுவின் கிருபை உண்டு
அவரின் கண்களில் தயவு உண்டு - 2
- ஜீவ ரட்சணை
மனிதர் உனக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது
தேவன் உன்னை நடத்துக்கின்ற வழிகள் யாருக்கும் புரியாது - 2
எதுவும் தானாய் நடக்கவில்லை
இயேசுவும் உன்னை மறக்கவில்லை -2
- ஜீவ ரட்சணை
தினமும் உனக்கு நடப்பதெல்லாம் உந்தன் உயர்வுக்கு காரணமே
தேவன் உன்னை உயர்த்திடுவார்
அதுவும் உனக்கு புரிந்திடுமே - 2
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
தரிசனம் தந்தவர் உயர்த்திடுவார் - 2
- ஜீவ ரட்சணை