துதிப் பாடல்கள்

ஜீவ நதிக்கரையில் தாகத்தோடு

Jeeva Nadhikkaraiyil Thaagathodu

ஜீவ நதிக்கரையில் தாகத்தோடு வந்தேன்... - 2

ஜீவ நதியே... - 2 ஜீவ நதியே... - 2

ஜீவ தண்ணீரால் தாகம் போக்குமே... - 2

ஊற்றெடுத்துப்பாயும் எங்கள் ஊற்றுத் தண்ணீரே

ஒருபோதும் வற்றாத ஜீவ நதியே... - 2

வாடிய பயிர்நாங்கள் வான் மழை நீரே

வறண்ட எம்முள்ளத்தை வளமாக்குமே... - 2

நதியே ஜீவ நதியே

ஜீவத்தண்ணீராய் தாகம் போக்குமே... - 2

தாழ்மையிலே இயேசுவைப்போல் லீலிபுஸ்பமாய்

ஆவியில் பெலம்கொண்ட கேதுருமரமாய்... - 2

ஆலயத்தில் பச்சை ஒலிவ மரங்களாய்

அனுதினம் வாழும் அந்த கிருபை தாருமே... - 2

நதியே ஜீவ நதியே

ஜீவ தண்ணீராய் தாகம் போக்குமே... - 2

திராட்சைச் செடி இயேசுவில் நாம் கொடிகளாகவே

அனுதினமும் படர்ந்து நல்ல கனிகொடுக்கவே... - 2

நாள் தோறும் ஆவியின் மழை என்னில் ஊற்றியே

அபிஷேக தைலத்தால் என்னை நிரப்புமே... - 2

நதியே ஜீவ நதியே

ஜீவத்தண்ணீரால் தாகம் போக்குமே... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு