துதிப் பாடல்கள்

ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன்

Jebathaalae Uyirvaazhgiren

ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன் - இயேசையா

ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன்

ஜெபம் இல்லையேல் ஜெயம் இல்லையே

நீர் இல்லையேல் இங்கு நானும் இல்லையே

கண்ணீரின் ஜெபத்தை கணக்கினில் வைத்து

கருத்தாய் எனக்கு பதில் கொடுத்தீர்

அழுகையும் புலம்பலும் ஆனந்தமாக்கி - 2

மகிழ்வுடன் என்னை வாழவைத்தீர்

உம்மோடு பேசும் ஒவ்வொரு நிமிடமும்

ஆயுளும் பெலனும் கூடுதையா

உம்மோடு வாழும் ஒவ்வொரு நாளும் - 2

ஆசீர்வாதம் பெருகுதையா

உம்மன்பு எனக்கு கிடைக்காதிருந்தால்

துக்கத்தில் என்றோ அழிந்திருப்பேன்

இரக்கமும் கிருபையம் இல்லாமல் போனால்

மரணத்தை என்றோ தழுவியிருப்பேன

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு