ஜெபமே ஜீவன் ஜெபமே ஜெபம் ஜெபமே வாழ்வு
இதை ஏற்றுக் கொண்டால் வாழ்வினிலே இல்லை தாழ்வு -
அன்னையாக மாற அன்னாள் கண்ணீர் விட்டு ஜெபித்தாளே
உள்ளந்தனை ஊற்றி அன்று மனம் கசந்து அழுதாளே
தொல்லை பல வந்தபோதும் சோர்ந்திடாது ஜெபித்தாளே
நல்லதொரு தீர்க்கதரிசியாம் சாமுவேலைப் பெற்றாளே
பெற்றதினால் மனம் மகிழ்ந்து தேவனை அவளும் துதித்தாளே -
எஸ்தரன்று ஜெபித்ததாலே யூதர்கள் விடுதலையானாரே
ஆமான் எனும் கொடியவன் கையில் யூத தேசத்தை மீட்டாளே -
எஸ்தரைப் போல் நீயும் இன்றே தைரியமாக ஜெபிப்பாயே
நியும் இன்று ஜெபித்தால் போதும் இந்திய தேசத்தை மீட்பாயே
இயேசுவின் வருகையிலே நீ சந்தோஷத்துடனே செல்வாயே -