துதிப் பாடல்கள்

இயேசப்பா உம்மை நான் நேசிக்கிறேன்

Yesappaa Ummai Naan Nesikkiren

இயேசப்பா உம்மை நான் நேசிக்கிறேன்

உங்க அன்பினிலே நித்தமும் வாழ விரும்புகிறேன்

உறவு என்பது இனிமையானது

பிரிவு என்பது கொடுமையானது - உங்க

உலகம் காட்டும் அன்பெல்லாம்

உண்மை என்று நானிருந்தேன்

மேகம் போல கலைந்து போகும்

என்பதை நான் உணர்ந்தேன்

ஆதாயம் தேடுகின்ற வியாபார உலகம்

அன்பைகூட விலைபேசும் அற்பமான இதயம்

அன்பே என்றும் உந்தன் அன்பு போதுமே - இயேசப்பா .

எனக்காக உயிர் கொடுத்தீர் கோரமான சிலுவையில்

உமக்காக நான் என்ன செய்தேன் பாவமான உலகினில்

இளைய மகன் போலே உந்தன் அன்பை விட்டுப் பிரிந்தேன்

சிற்றின்ப வாழ்வை எண்ணி ரெக்கை கட்டிப் பறந்தேன் - ஆனாலும்

என்னை தம் சிறகில் மூடினர் - இயேசப்பா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு