இரட்சகர் இயேசு பிறந்து விட்டார்
இரட்சிக்கத்தானே வந்து விட்டார் - 2
மகிழ்ச்சியோடே பாடிடுவோம்
புகழ்ச்சி மாலை சூட்டிடுவோம் - 2
1. வார்த்தையான தேவனவர்
மனிதனாக பிறந்து விட்டார் - 2
பரத்தில் வாழும் தேவனவர்
ஜனத்தின் நடுவே பிறந்து விட்டார் - 2
மக்களுக்காக பிறந்து விட்டார்
இரட்சிக்கத்தானே வந்து விட்டார் -2
2. வானம் அவருக்கு சிங்காசனம்
பூமி அவரது பாதப்படி - 2
வந்தார் தேவன் வார்த்தைபடி
பிறந்தார் இயேசு சொன்னபடி - 2
ஆண்டவர் இயேசு பிறந்து விட்டார்
இரட்சிக்கத்தானே வந்து விட்டார்
3. உலகத்தின் மையா பகுதியிலே
ரட்சகர் இயேசு பிறந்து விட்டார் - 2
பாவ சாபம் நீக் (போ)க்கிடவே
நம்மை வாழ வைத்திடவே - 2
உலக ரட்சகர் பிறந்து விட்டார்
இரட்சிக்கத்தானே வந்து விட்டார்