இரத்தத்தில் கலந்த இரட்சகரே
என் இரத்தத்தில் கலந்த இரட்சகரே
என் இதயத்தில் இணைந்த உத்தமரே-2
உலகத்தை மீட்டதும் உம் இரத்தமே
உயிர்களை காப்பதும் உம் இரத்தமே-2
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் ஆமென் அல்லேலூயா
குற்றம் இல்லாதது உம் இரத்தமே
என் குறைகளை தீர்த்ததும் உம் இரத்தமே-2
மாசில்லாதது உம் இரத்தமே -2
என்னை மறுரூபமாக்கியது உம் இரத்தமே
நீதிமானாகிய உம் இரத்தமே
என்னை நீதிமானாக்கியது உம் இரத்தமே-2 விலையேறப்பெற்றது உம் இரத்தமே-2
என்னை விலையின்றி மீட்டது உம் இரத்தமே-2
உடன்படிக்கை செய்தது உம் இரத்தமே
என்னை உம்மோடு இணைத்தது உம் இரத்தமே-2
தெளிக்கப்பட்ட உம் இரத்தமே -2
என்னை தெளிய வைத்தது உம் இரத்தமே-2
நன்மைகளை பேசும் உம் ரத்தமே என்னை
நன்மைகளை செய்ய வைத்தது உம் இரத்தமே-2
கறைகள் படாதது உம் இரத்தமே -2
என் கறைகளை கழுவியது உம் இரத்தமே-2