துதிப் பாடல்கள்

இறங்கிடுதே இறங்கிடுதே

Irangidudhae Irangidudhae

இறங்கிடுதே இறங்கிடுதே

ஆவியின் வல்லமை இறங்கிடுதே

பாய்ந்திடுதே பாய்ந்திடுதே

அக்கினியாக பாய்ந்திடுதே

இயேசுவின் நாமம் உயர்ந்திடுதே

சாத்தான் கிரியை அழிந்திடுதே

தண்ணீரை கடந்தாலும் வெள்ளம் மோதிடாதே

அக்கினியில் நடந்தாலும் வேகாமல் காக்கின்றாரே

சர்வ வல்ல தேவனே நம்மோடிருக்கின்றாரே

ஆவியானவரே நம்மோடுலாவுகின்றார்

வெண்கல கதவெல்லாம் உடைந்து நொறுங்குதே

இரும்பு தாழ்பாள்கள் முறிந்து விழுந்திடுதே

தடைகள் உடைக்கின்றாரேமதிலும் தகர்க்கின்றாரே

பலத்த கரமே இங்கு ஜெயத்தை கொண்டு வருதே

கட்டுகள் எல்லாம் அந்ககாரமெல்லாம்

கண்ணீர் கவலையெல்லாம் தீராத வியாதியெல்லாம்

சுட்டெரிக்கின்றாரே சுகமாக்குகின்றாரே

அக்கினி நதியாய் - இப்போ பாய்ந்து இங்கு வருதே

கனிகள் தந்திட சாட்சியாக வாழ

தேவ பெலனடைய நாம் அபிசேகத்தில் நிரம்ப

ஊற்று தண்ணீராக - ஒர் ஜீவநதியாக

வல்லமை பலமாய் - இப்போ இறங்கி இங்கு வருதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு