இரக்கத்தையும் நியாயத்தையும்
குறித்துப்பாடுவேன்
கர்த்தாவே உம்மை
தினமும் போற்றுவேன்... - 2 (ஆமென்...)
உத்தமமான வழியிலே
விரைந்து நடப்பேன்
எப்பொழுது என்னிடத்தில்
கர்த்தாவே வருவீர்... - 2 (இரக்கத்தையும்...)
தீங்கான காரியத்தை
கண்முன்னே வையேன்
பொல்லாத மனுஷருடன்
அமரவும் மாட்டேன்... - 2 (இரக்கத்தையும்...)
கல்வாரிப்பாதையிலே
தினமும் நடப்பேன்
கர்த்தர் இயேசு ராஜாவுடன்
கைகளைக் கோர்ப்பேன்... - 2 (இரக்கத்தையும்...)
பரலோகவாசஸ்தலம்
ஜீவ கிரீடமும்
சந்தோஷம் சமாதானம்
பெற்று வாழுவேன்... - 2 (இரக்கத்தையும்...)