இறைவா இயேசுவே
உம்மை நான் அழைக்கிறேன்
என்னுள்ளம் நீர் தங்கும் ஆலயம்... - 2
ஆலயத்தை ஒருவன் கெடுத்தால்
அவனை நான் கெடுப்பேன் என்றீர்... - 2
ஆலயத்திலே சுத்தம் நிலவ
ஆலயத்திலே ஜெபமும் பெருக
ஆவியால் நிரப்பும் என்னை - உமது
ஆவியால் நிரப்பும் என்னை
அன்பு என்னும் தீபம் எரிய
இச்சை என்னும் தீமை விலக... - 2
தூபவர்க்கமாய் வெள்ளை போளமாய்
குங்குலியமாய் சாம்பிராணியாய்
ஜெபங்களை ஏறெடுப்பேன் - எனது
ஜெபங்களை ஏறெடுப்பேன்
ஆவியின் கனிகள் பெருக
மாம்சத்தின் கிரிகை ஒழிய... - 2
அன்பு என்னும் தீபம் எரிய
பாசம் என்னும் ஒளியும் வீச
அபிஷேகத்தைலம் ஊற்றுமே - என்மீது
அபிஷேகத்தைலம் ஊற்றுமே