துதிப் பாடல்கள்

இராக்காலம் வெகு சமீபம்

Iraakkaalam Vegu Sameebam

இராக்காலம் வெகு சமீபம்

விழித்தெழும்பி வேகம் செல்லு

நிலையானதொன்றும் இங்கில்லை இங்கில்லை

நித்திய வாழ்வோ அங்குண்டு அங்குண்டு

இராக்காலம் வெகு சமீபம்

விழித்தெழும்பி வேகம் செல்லு

வேகம் செல்லு

உன் பெலன் எல்லாம் போய்விடும் ஒருநாள்

உன் வினை ஒன்று சேர்ந்து உருத்திடுமே

உன் பாவமெல்லாம் திரும்பிடும் ஒருநாள்

உலக பயம் உன்னை விரட்டிடுமே

நம்பிட யாருமின்றி நின்றிட நிழலுமின்றி

நிம்மதி தேடி நீயும் ஏங்குவாயே

உன் குற்றம் உன்மேல் திரும்புமுன்

சிந்தித்து நீயும் மனம் திரும்பாயோ

பாடுகள் பலப்பட்டு பேசிட யாருமின்றி

படுக்கையை கண்ணீரினால் நினைக்கிறாயோ

பாதைகள் கடந்தும் பாதங்கள் தளர்ந்தும்

பயணத்தில் அர்த்தமில்லை என்கிறாயே

பாறை போல் பாரமாய் இருக்கும் உன் சுமையை

பனித்துளி போல மாற்றுவாரே

நீ பதறாமல் கூப்பிடு உன் அருகினில் இயேசு நிற்கிறார்

அறுவடை மிகுதி ஆட்களோ குறைவு

அழைப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்பாய்

அழிந்திடும் உலகை ஆதாயம் செய்திட

அன்பரின் அண்டையில் சேர்ந்திடுவாய்

தேவனின் சேவையை செய்திட சீக்கிரமாய்

உன்னை பலியாய் அர்பணிப்பாய்

இனி வாழ்வது நீ அல்ல இயேசு உன்னை மீட்டுக்கொண்டாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு