இந்த நல்ல நாளைக் காணச் செய்தீரே
உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா
இந்த நாள் முழுக்க என்னோடு வரப்போகிறீர்
உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா
உங்க கையக் குடுங்க நான் பிடிச்சிக்கிறேன்
உங்க பாதத்த காட்டுங்க பணிஞ்சிக்கிறேன்-2
பொல்லாத உலகம் புரிஞ்சுக்க முடியல
(போக்கிலும் வரத்திலும் கூட வாங்க)-2
நான் மாறும்படி உம்மில் சேரும்படி
உமக்குள் தேறும்படி நீங்க கூட வாங்க
உங்க ஆசப்படி நான் நடக்கும்படி
எனக்கு பாதை காட்ட கூட வாங்க
எனக்கு பாதுகாப்பா வந்திடுங்க
எவனை விழுங்கலாம் என்று வகை தேடும்
(பிசாசை நொறுக்க கூட வாங்க)-2
ஜெபத்தில் முட்டிபோட்டு எதிரியை கட்டிப்போட்டு
ஜெயத்த பெற்றுக்கொள்ள நீங்க கூட வாங்க
நீங்க வந்தாலுமே எதிரிய பந்தாடுவேன்
எனக்கு உதவி செய்ய கூட வாங்க
எந்த உபத்திரவத்திலும் கூட நில்லுங்க
உங்க சமூகம் என்னோட கூட வந்தா
(விசேஷித்தவரா மாறுவேனுங்க)-2
இளைப்பாறும்படி களைப்பு தீரும்படி
கோணல் மாறும்படி நீங்க கூட வாங்க
உங்க நேசத்துக்கும் பெரிய பாசத்துக்கும்
உரிய பங்கைக் கொடுக்க கூட வாங்க
உங்க பாதம் எனக்கு போதுமுங்க
நான் போகும் வழியை அறிந்தவர் ஆதலால்
(முன்னாலும் பின்னாலும் நெருக்கி நில்லும்)-2
உமது விருப்பப்படி என்னைத் திருப்பும்படி
நான் பணியும்படி நீங்க கூட வாங்க
நீர் சொன்னபடி கேட்டுச் செய்யும்படி
என் வழிகளுக்கெல்லாம் அதிகாரி நீங்க
வாழும் வழி காட்ட வந்திடுவீங்க