இந்த ஆண்டு முழுவதும்
உமது நன்மையினாலே என்னை நிரப்பிடும் நிரப்பிடும் தேவ
இந்த ஆண்டு முழுவதும்
உமது கிருபையினாலே
என்னை நிரப்பிடும் நிரப்பிடும் தேவ
உமது ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக
என்மேல் பலித்திட அருள்தாரும் தேவா -2
1- என் வாழ்வில் அசையாத
கன்மலையும் நீர்தானே
என் வாழ்வில் சூழ்ந்து நிற்கும்
கோட்டையும் அரணும் நீர்தானே-2
ஆவியின் வரங்களினால் நிரப்பிடும் தேவா
அபிஷேக வல்லமை தந்து உயர்த்திடும் தேவா-2
2- என் வாழ்வில் பிரகாசிக்கும்
சுடரொளியும் நீர்தானே
என் வாழ்வை ஜெயமாக்கும்
ஜெயக்கொடியும் நீர்தானே-2
எல்லைகளை பெரிதாக்கி விரிவாக்கும் தேவா
நீர் என்னை பெலப்படுத்தி நடத்திடும் தேவா-2
3- என் வாழ்வின் நம்பிக்கையும்
நங்கூரமும் நீர்தானே
நான் நம்பும் துருகமும்
அடைக்கலமும் நீர்தானே-2
அன்றாடம் நீரே என்னை நடத்திடும் தேவா
தீமை ஒன்றும் அனுகாமல் காத்திடும் தேவா-