இம்மானுவேலரே எனக்காக வந்தாரே
( பிறந்தாரே இயேசு பாலகன் - இன்று )
1, மோட்சம் விட்டு தாட்சையுள்ள முன்னணையிலே
முன்னும் அவர் சொன்னபடி பிறந்து விட்டாரே - 2
2, ஆட்களுடன் சத்தத்துக்குள் அழுது வந்தாரே
ஆனந்த கொண்டாட்டமாய் பிறந்து விட்டாரே - 2
3, பங்குமற்ற பசுந்தொட்டியில் படுத்து வந்தாரே
தேவ மகிமை துறந்து இங்கு பிறந்து விட்டாரே - 2
4, தாழ்மையுள்ள தேவன் தலை சாய்த்தாரே
சர்வ வல்ல தேவன் இங்கு பிறந்து விட்டாரே - 2