இம்மானுவேலன் பிறந்தார்
இம்மானுவேலன் பிறந்தார்
1.இகத்தை மீட்டிடவே
இருளை அகற்றிடவே (2)
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தார். - இம்மானுவேலன்
2.சமாதானம் தந்திடவே
சந்தோசம் அளித்திடவே (2)
சமாதானக் காரணர் பிறந்தார் (2) - இம்மானுவேலன்
3.பாவங்கள் போக்கிடவே
சாபங்கள் நீக்கிடவே(2)
இரட்சகர் இயேசு பிறந்தார் (2) - இம்மானுவேலன்
4.மனுக்குலம் மகிழ்ந்திடவே
மங்களம் செழித்திடவே(2)
மன்னவன் இயேசு பிறந்தார் (2) - இம்மானுவேலன்
5.நம்மையும் இரட்சித்து
பரலோகம் சேர்த்திடவே(2)
இன்றைக்கு இயேசு பிறந்தார் (2) - - இம்மானுவேலன்
6.அக இருள் நீங்கிடவே
பாவ இருள் அகன்றிடவே (2)
உள்ளத்தில் இயேசு பிறந்தார் (2) - - இம்மானுவேலன்